1981 - A Love Story!
********************************************
இம்மாதிரி தலைப்பைப் பார்த்தவுடன், "கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா" என்று நினைத்தபடி, இப்பதிவுக்கு வருகை தந்த உங்களை நான் ஏமாற்றவே மாட்டேன் ! ஏனெனில், இது உண்மையாகவே ஒரு காதல் கதை சம்மந்தப்பட்டது தான் !!!
கொஞ்ச நாட்கள் முன், எங்கள் வீட்டுப்பரணை சுத்தம் செய்ய வேண்டி சில பழைய பெட்டி/டப்பாக்களை கீழே இறக்கி குடைந்து கொண்டிருந்தபோது, நான் முன்னொரு காலத்தில் (24 ஆண்டுகளுக்கு முன்!!!) எழுதிய சிறுகதை(யா?) ஒன்று தட்டுப்பட்டது. உடனே உங்கள் ஞாபகம்(!) தான் வந்தது! (வசமாக மாட்டினீர்களா ?). அக்கதை எழுதப்பட்டிருந்த மக்கிப் போயிருந்த காகிதங்களை ஸ்கேன் செய்து, உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்! என் கதை எழுதும் திறமையை வளர்த்துக் கொள்வதை விடுத்து, நான் பொறியியல் படிக்கச் சென்று விட்டது உங்கள் துரதிருஷ்டமே ;-)
ஒரு சின்ன பிரச்சினை! பழைய காகிதங்கள் என்பதால், கதையைப் படிக்க நீங்கள் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். இன்னுமொரு பிரச்சினை (அதானே!). கதையின் முக்கியக் கட்டத்தில் (Turning Point!) எழுத்துக்கள் அழிந்து போயுள்ளன!!! இதுவும் உங்கள் துரதிருஷ்டமே ;-)
இருந்தாலும், 'என்ன எழுதியிருப்பேன்?' என்று என் பழைய ஞாபகங்களை கடுமையாக(!) அலசிக் கொண்டிருக்கிறேன் ! ஞாபகம் வந்தால் (வரும்!) 'யுரேகா!' என்று கூவியபடி வந்து பதித்து விடுகிறேன்! அதற்குள் உங்களுக்கு அது குறித்து ஏதாவது தோன்றினால், சொல்லுங்களேன். ஆனால், அதற்காக (அதாவது, சிறந்த கற்பனைக்காக!) "பாதி ராஜ்யம் தந்து, என் பெண்ணையும் கொடுப்பேன்" என்றெல்லாம் சொல்ல நான் ஒன்றும் சுஜாதா(!) கிடையாது! அதிகபட்சமாக, டிரைவ்-இன்னில் போண்டா, காபி வாங்கித் தர இயலும் !!! இனி, 1981 - A LOVE STORY .....
***************************************************
***************************************************
ரவியின் அப்பாவுக்கு ரவியின் காதல் விஷயம் எப்படித் தெரிந்திருக்கும் என்று யாராவது யோசித்துக் கூறுங்களேன், Please !!!!!
என்றென்றும் அன்புடன்
பாலா
10 மறுமொழிகள்:
அறுமையான கதை பாலா ??!!!! :-((,
நல்ல வேளை ,உங்களுக்கு பொறியியல் கல்லூரி சீட்டு கிடச்சது.இல்லன்னா தமிழ் எழுத்துலகம் கதி அதோ கதி ஆகியிருக்கும் போல இருக்கே.
பரணைக் கொடஞ்சு பழைய பேப்பர் கெடச்சதும் ஒங்களுக்கு பழைய பேப்பர்காரன் ஞாபகம் வராமல் வலைப் பதிவு ஞாபகம் வந்ததா ...சூப்பர்.
இந்தக் கதைக்கு என்ன முடிவு நீங்க 1981-ல் எழுதியிருப்பீங்கன்னு கடுமையா யோசிச்சி மண்டைய பிராண்டிக்கிட்டு இருக்கேன்.
விடை ஞானோதயம் வந்ததும் மீண்டு(ம்) வந்தால் பதிகிறேன்.
விடை சொன்னா வாங்கி குடுக்குறதா சொன்ன போண்டா,காபியாவது fரெஷ்ஷா இல்லாட்டி 1981-லயே வாங்கி அதையும்
பரண்லயே வச்சிருந்தீங்களா?
பின் குறிப்பு
இன்னும் நல்லா தேடிப் பாருங்க.நீங்க முன்னாடி எழுத்தாணி வச்சு எழுதுன ஓலைச்சுவடி கிடைச்சாலும் கிடைக்கும்.
அதுல தலைப்பை தவிர மீதி எல்லாத்தையும் கரையான் அரிச்சிருந்தாலும் பரவாயில்லை .தலைப்பையாவது பதிவா போடுங்க.கதைய நாங்க எழுதிக்கிறோம்.
Dear baalaa...just for fun...you know that...cheers
அன்புடன்... ச.சங்கர்
Chithappa ethaiyaavathu edukka udane thirubi vanthirupaar & ravi+jannal conversation avar kaathula vizhunthirukkum. (Appadiye raviyoda appa kaathulayum). Eppadi en yoogam :-)
ஒரு புகழ்பெறப் போகும் ஆரம்ப எழுத்தாளர், பதின்ம வயதில் எழுதிய காதல் காவியம்?! அந்தக் கால சிறுகதைகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்.
என் ஊகம்:
சித்தப்பா ஊருக்கு கொண்டு வருவதற்காக ஒரு டேப் ரெகார்டர் வாங்கி அந்த பெட்டிக்குள் வைத்திருந்தார். அது தவறுதலாக ஆன் ஆகிவிட, உன் உளறல்கள் அனைத்தும் அதில் ரெகார்ட் ஆகி விட்டது!
BTW, my last 2 posts are losing their charm without your comments:-)
நாராயண... நாராயண... நாராயண...
"பின்னூட்டங்கள் எல்லாம், கண்ணா, கேட்டு வரக்கூடாது, தானா வரணும்"
;-)
Where are my REGULAR visitors, Gopi, VM, mayavarathaan ... ?
---BALA
பாலா,
நல்ல முயற்சி. முன்னாடி கொடுத்த Build-upபை கொஞ்சம் கம்மி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
பாலா.. நானும் சுரேஷோட யூகத்தோட தான் பின்னூட்டமிட வந்தேன். சத்தியமா அவரோட கருத்தை பார்க்கிறதுக்கு முன்னாடியே தோணிதது அதே தான். அதனாலே ஆளுக்கு பாதி போண்டான்னு சொல்லிடாம ஆளுக்கு ஒரு ப்ளேட் வாங்கிடுங்க.
அப்படியே எதிரே இருக்கிற துராக்கியாலே எனக்கு ஒரு கண்ணாடியும் வாங்கி கொடுத்துடுங்க. screen கிட்டே போய் கதையை படிச்சதுலே எல்லாம் இப்போ மணி ரத்னம் படம் மாதிரி தெரியுது. :-)))
சங்கர்,
//அதுல தலைப்பை தவிர மீதி எல்லாத்தையும் கரையான் அரிச்சிருந்தாலும் பரவாயில்லை .தலைப்பையாவது பதிவா போடுங்க.கதைய நாங்க எழுதிக்கிறோம்.
//
சுருதி சுத்தமாக நக்கல் செய்வதில் தங்களுக்கு ஈடுஇணை கிடையாது:) ரவியின் அப்பாவுக்கு எப்படி அவனது காதல் சங்கதி தெரிந்தது என்பதைக் கண்டுபிடிக்காமல், தலைப்பை மட்டும் தந்தால் கதையைத் தருவீங்களாமா, நல்லா இருக்கு கதை ;-)
Thangam,
உங்கள் யூகம் பரவாயில்லை ! ஆனால், நம்ம கதையின் நாயகன் ரவி, வாசக்கதவை சாத்தாமல், "காதல்" ஜன்னலை திறக்கவே மாட்டானாக்கும் ;-)
கருத்துமிகு (பினாத்தலுக்கு எதிர்மறை!) சுரேஷ்,
மாட்டுக்கண் (Bull's Eye) அடித்ததற்கு என் பாராட்டுக்கள் !!! Nowadays, You are simply unstoppable :)
நாரதர் ஞானபீடம் அவர்களே,
அதென்ன, பதிவிலே கேட்டிருந்த கேள்விக்கு விடை தராம, குசும்பு பண்றதுங்கறேன் :)
தேசிகன்,
கருத்துக்கு நன்றி. உங்கள் அறிவுரையை நினைவில் கொள்கிறேன்.
ரம்யா,
//அதனாலே ஆளுக்கு பாதி போண்டான்னு சொல்லிடாம ஆளுக்கு ஒரு ப்ளேட் வாங்கிடுங்க.
//
வாங்கித் தரேன் :))))))
//அப்படியே எதிரே இருக்கிற துராக்கியாலே எனக்கு ஒரு கண்ணாடியும் வாங்கி கொடுத்துடுங்க.
//
ஆனால், துராக்கியால, கண்ணாடி விலை அதிகம் என்பதால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு, இருந்தாலும், கண் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால், I shall actively consider your request ;-)
என்றென்றும் அன்புடன்
பாலா
நல்ல முயற்சி, when you were young :)
sankar, thangam, Agent 8860336 ஞானபீடம், Suresh, Desikan and Ramya,
Trust you saw my RESPONSE to your comments :)
Post a Comment